Categories
உலகசெய்திகள்

ராணுவ சுயாட்சி இயக்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் குண்டு வீச்சு… 50 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் இசை நிகழ்ச்சி கலந்து கொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று குண்டுகள் வந்து விழுந்து வெடித்ததாக தெரிவிக்கின்றனர் இதனால் கூட்டத்தினர் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் இந்த குண்டு வீச்சில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகவும் 100 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிகின்றது. இந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்ற கட்சியின் மாகாணத்தில் பல வருடங்களாக கிளர்ச்சியாளருக்கும் ராணுவத்திற்கும் இடையே சண்டை நடைபெற்று வருவதும் அங்கே பச்சை மாணிக்க கல் சுரங்கங்கள் ஏராளமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ராணுவ ஆட்சியை கவிழ்ப்பதற்கு மியான்மரில் உள்ள பிற ஆயுத குழுக்களுக்கு கட்சியின் கிளர்ச்சியாளர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு பதிலடியாக அல்லது ஒரு எச்சரிக்கையாக இருந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |