ராணுவ தளத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவத் தளத்திற்கு மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்குள்ள வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் மர்ம நபர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் உள்ளூர் கிளர்ச்சியாளர்களின் படைகள் தான் என அதிபர் இவான் டியூக் குற்றம் சாட்டி இருக்கிறார்.