நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன ரக போர் விமானங்களை வாங்குவதற்கு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமீரகம் சார்பில் ஏற்கனவே அமெரிக்காவுடன் நவீன போர் விமானங்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன ரக போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைப்புடன் அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சீன ராணுவ தயாரிப்பான எல்-15 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு உடன்பாடு உள்ளது. மேலும் அமீரகம் சார்பில் மொத்தம் 12 விமானங்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக 36 மாதங்கள் வரை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனாவின் தேசிய விமான தொழில் நுட்ப ஏற்றுமதி,இறக்குமதி அமைப்பு மற்றும் அமீரகத்தின் பாதுகாப்பு நிறுவனமான ‘தவசுன்’ ஆகியவை ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது. மேலும் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.