Categories
தேசிய செய்திகள்

ராணுவ பஸ் மீது திடீர் தாக்குதல்…. பதிலடி கொடுத்த ராணுவ வீரர்கள்….!!!!!!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலுக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்த நிலையில் அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பஸ் சென்றிருக்கிறது.அப்போது திடீரென பஸ்சின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக பஸ்சில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து விரட்டி அடித்துள்ளனர். வீரர்களின் தாக்குதலைக் கண்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் ரோந்து பணியில் வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |