குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு 20 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும் திறம்பட பணியாற்ற தேவையான சாதனங்களை வாங்குவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ள நிதி உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. கார்கில் போரின் இந்தியா வெற்றியடைந்த 21ஆவது ஆண்டு வெற்றி தினமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டாடப்பட்டது . மாளிகை செலவுகளில் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கை மூலமாக, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் நிதி கிடைக்க செய்யும் விதத்தில், ராணுவ மருத்துவமனைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 20 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இதற்குமுன் குடியரசுத் தலைவர் மாளிகையில் பெரும்பாலான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலமாக செலவினங்களை குறைக்க குடியரசுத் தலைவர் அறிவுரை கூறியிருந்தார். அதன் ஒரு பகுதியாக பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக ஒரு சொகுசு வாகனம் வாங்கக்கூடிய திட்டத்தினை குடியரசுத் தலைவர் தவித்தார்.குடியரசுத்தலைவர் ராணுவ மருத்துவமனைக்கு அளிக்கின்ற நன்கொடை மூலமாக காற்று சுத்திகரிக்கும் சுவாசக் கருவி வாங்கவிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவ பணியாளர்கள் சுவாசிப்பதற்கும், தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும் இத்தகைய அதிநவீன கருவி உதவியாக இருக்கும்.