பிலிப்பைன்ஸின் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமானம் விபத்தில் 17 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் சமீபத்தில் ராணுவ பயிற்சி முகாமில் பட்டம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
Categories