Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராணுவ வீரராக நடிக்கும் துல்கர் சல்மான்… படத்தில் இரண்டு பிரபல கதாநாயகிகள்… யார் தெரியுமா?…!!

தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் உருவாகும் துல்கர் சல்மானின் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ஹனு ராஹ்வபுடி இயக்குகிறார். 1960 களில் நடக்கும் போர் பற்றிய கதையில் ராம் என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ள நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை ராசி கண்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

நடிகை ராசி கண்ணா இமைக்காநொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 3 மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இதையடுத்து இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.

Categories

Tech |