ராணிப்பேட்டையில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பை ஆட்சியர் தொடங்கி வைத்தார் .
தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு துணை ராணுவ படையினர் ,தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து அரக்கோணம் பகுதியில் கொடி அணிவகுப்பு தொடங்கினர். இந்த அணிவகுப்பை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் போலீஸ் சூப்பர் சூப்பிரண்டான சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இந்த அணிவகுப்பு கிருஷ்ணா ஐ.டி.ஐ யில் தொடங்கி எஸ்.ஆர் .கேட்டில் நிறைவடைந்தது. இதன்பின் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற, தேசிய வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி ஆட்சியர் ஆணை சிவதாஸ் தாசில்தார் பழனிவேல்ராஜன் மற்றும் கிருஷ்ண கல்வி நிறுவனத்தின் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல அரசு பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.