Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு… உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு மாத ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 4 வது  நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுடன்  மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் வீதிகளில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை முற்றி உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்ய வீரர்களை விரட்டி கார்கிவ் நகரையும் மீட்டு  விட்டதாகவே உக்ரேன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவ தளவாடங்களையும் அழித்துவிட்டதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மாத ஊதிய உயர்வு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.அதன் மதிப்பு  இந்திய ரூபாய் மதிப்பில் 2.52 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |