Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50,00,000 நிவாரணம் – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!

ராணுவ வீரர் சாய் தேஜா என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. தற்போது குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே பெங்களுரு விமானப்படை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.. இந்த சம்பவம் இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.. பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.. மேலும் பல்வேறு நாடுகளும் தங்களது இரங்கலை தெரிவித்தது..

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேர்களில் ஒருவரான ஆந்திராவைச் சேர்ந்த 27 வயதான கமாண்டோ வீரர் லான்ஸ் நாயக் பி சாய் தேஜா என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.. சாய் தேஜா முப்படை தளபதி பிபின் ராவத்தின் தனிப் பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

சாய் தேஜாவுக்கு சியாமளா என்ற மனைவியும், மோக்ஷக்னா (5) என்ற மகனும், தர்ஷினி (2) என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |