Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராதாபுரம் தொகுதி…. கெத்து காட்டிய தி.மு.க…. சட்டமன்ற தேர்தல் முடிவுகள்….!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.கவினுடைய வேட்பாளர் வெற்றி வாகையை சூடியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 25 வேட்பாளர் போட்டியில் உள்ளனர். இந்த 25 போட்டியாளர்களில் தி.மு.க சார்பாக அப்பாவு என்பவரும், அ.தி.மு.க சார்பாக இன்பத்துரையும் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தமாக 2,70,525 வாக்காளர்கள் இருக்கும் நிலையில், தேர்தல் நாளன்று1,86,407 வாக்குகள் பதிவாகியது.

இந்த நிலையில் வாக்கு என்ன ஆரம்பித்த முதல் சுற்றில் அ.தி.மு.கவினுடைய வேட்பாளரான இன்பதுரை முன்னிலை பெற்றுள்ளார். ஆனால் 2 ஆவது சுற்றிலிருந்தே தி.மு.கவினுடைய வேட்பாளரான அப்பாவும் முன்னிலை வகித்ததோடு, அதன்பின் தொடர்ந்து அவர் முன்னிலை பெற்று இறுதியாக 82,331 வாக்குகளை பெற்று வெற்றியை சூடினார். இந்த நிலையில் அ.தி.மு.கவினுடைய வேட்பாளரான இன்பதுரை 76,406 வாக்குகளை பெற்றுள்ளார்.

Categories

Tech |