தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வரலட்சுமி, சரத்குமாரின் மகளான இவரிடம் பேட்டி ஒன்றில் ராதிகாவின் மகள் ரேயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ரேயன் தைரியமான பெண்.
இதுபோன்ற விஷயங்களை அவர் எளிதாக கையாள்வார். என்னைக் கூட ராதிகாவை ஏன் அம்மா என்று கூப்பிடவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். ராதிகா என் அம்மா இல்லை என்றும், அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி என்றும், ராதிகாவுடன் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி என்றும், எல்லாருக்கும் ஒரு அம்மா மட்டும்தான் இருக்கமுடியும் என்று கூறினார்