Categories
சினிமா தமிழ் சினிமா

ராதிகா, கோபிக்கு திருமணம்…. “மண்டபத்தில் இருக்கும் பாக்யா!”…. திருமணத்தை நிறுத்த பிளான் வைத்திருக்கும் தாத்தா…!!!!!

கல்யாணத்தை நிறுத்த ராமமூர்த்தி தாத்தாவிடம் என்ன பிளான் இருக்கின்றது என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி கல்யாணம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. கோபி கல்யாணத்திற்கு சமைக்க போகின்றோம் என பாக்கியாவுக்கு தெரியாது. பாக்யா, செல்வி அக்கா, ஜெனி எல்லாரும் மண்டபத்திற்கு கிளம்புகின்றார்கள். செல்வி அக்கா பொண்ணு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார். அப்போது அவர் வெளியே இருக்கும் போர்டை படிக்கின்றார். அதில் கோபிநாத் வரை படித்தார். பின் மேனேஜர் வர சொன்னதால் அவர் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்திலேயே ராதிகாவும் கோபியும் மண்டபத்திற்கு வருகின்றார்கள்.

அவரை சொந்தக்காரர்கள் உள்ளே அழைத்துச் செல்ல பாக்யா போன் பேசுவதற்காக வெளியே வருகின்றார். அப்போது வீட்டில் இருக்கும் செழியன் எழில் தாத்தாவை தேடுகின்றார். அதே நேரத்தில் ஈஸ்வரி பாட்டி சோகமாக இருப்பதையும் கவனிக்கின்றார். ஈஸ்வரி பாட்டி உண்மையை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். மண்டபத்தில் பாக்கியா போனில் சத்தமாக பேச அந்த குரல் கோபிக்கு கேட்கின்றது. அதனால் கோபி பாக்கியவை தேடுகின்றார். ஆனால் அதற்குள் ராதிகா அண்ணன் அவரிடம் பேச்சு கொடுக்கின்றார். பாக்கியா மணமகன், மணமகள் யார் என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றார். பாக்யாவிற்கு ராதிகா கோபி தான் மணமகள், மணமகன் என தெரிந்தால் அவர் என்ன செய்யப் போகின்றார்? எப்படி ரியாக் செய்வார் என்பது தெரியவில்லை. ராமமூர்த்தி தாத்தா வேகமாக வீட்டுக்கு வருகின்றார். திருமணத்தை நிறுத்த அவரிடம் என்ன பிளான் இருக்கின்றது என்பதே சஸ்பென்ஸாக இருக்கின்றது.

Categories

Tech |