ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே சத்யராஜுடன் நடிக்காதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.
ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பூஜா ஹெக்டே பேசியுள்ளதாவது, நாங்கள் ஐந்து ஆண்டுகள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளோம். இது ஆழமான காதல் கதையை கொண்டுள்ளது. பல துன்பங்கள் கடந்து இத்திரைப்படத்தை முடித்துள்ளோம். தயாரிப்பாளர் படத்தை பிரமாண்டமாக உருவாக்கி இருக்கின்றார். இப்படத்தில் எனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. ஆனால் நடிகர் சத்யராஜூடன் நடிக்காதது எனக்கு வருத்தம் அளிக்கின்றது. பிரபாஸ் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு தந்தார். இத்திரைப்படம் அழகாக அமைந்துள்ளது. இது கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.