நான் எனது படத்தின் முதல் நாள் படப்பிடிபை கட் அடித்துவிட்டு ராதே ஷ்யாம் படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி மற்றும் அனைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “ராதே ஷ்யாம் படத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். முன்னதாக எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் நிகழ்ச்சிக்கு என்னால் வர முடியவில்லை, இந்நிலையில் என்னுடைய படம் இன்று தான் ஸ்டார் ஆகுது அதை கட் அடித்துவிட்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ராதே ஷ்யாம் திரைப்படத்தை நான் இரண்டு மாதங்களுக்கு முன்னே பார்த்துவிட்டேன் 3 1/4 மணி நேரம் ஓடியது படத்தின் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே இருக்கிறது. நான் பாகுபலிக்கு முன்னதாகவே பிரபாஸின் ஃபேன். பூஜா இங்கு அரபி குத்து குத்தினார் அதே போல இந்த படத்திலும் கலக்கியுள்ளனர். மேலும் சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இறுதியில் ஒரு சண்டைக் காட்சி அட்டகாசமாக உள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் ரிலீஸ் செய்கிறோம் பார்த்து ரசியுங்கள்” என்று கூறினார்.