பெரம்பலூரில் நாக கன்னியம்மன் கோவிலில் ராமஜென்ம தினத்தை முன்னிட்டு ராமநவமி விழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதரசா சாலையில் அருகே சிறப்பு வாய்ந்த நாக கன்னியம்மன், ஜெய் அனுமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமஜெனம் தினத்தை முன்னிட்டு ராமநவமி விழா கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் அனுமன் சன்னதியில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், தீபாராதனைகளும் நடைபெற்றது.
மேலும் பல்வேறு வகையான பொருள்களால் சிறப்பு படையலுடன் நிவேதனமும் நடைபெற்றது. அந்த விழாவில் பூஜைகள் மற்றும் ஹோமம் ஆகியவற்றை கோவில் பூசாரி ராஜ்குமார் நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.