தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் இல்லத் திற்கு சற்று முன் வந்திருக்கிறார்கள். உள்ளே சென்று பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து பேசிவருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தங்களுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து மாற்றப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருந்தார். ஆகவே இந்த இட ஒதுக்கீட்டு தொடர்பாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரியவருகிறது.