நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ராமநவமி என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது.
எனவே நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு குடம் குடமாக பால் வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். மேலும் பஞ்சாமிர்தம், எண்ணெய், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களாலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஆஞ்சினேயருக்கு சந்தனக்காப்பு அலங்கராம் செய்யப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.