ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்க யாரும் வராததால் உயிர் போகும் நிலையில் இருப்பதாக பெண் நோயாளி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சராசரி படுக்கையில் ஆக்சிஜன் அல்லாத கொரோனா நோயாளிகள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளில் சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவத்துக்காக சென்றனர். ஆனால் அங்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை வாயிலில் நோயாளிகள் தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம் அளிக்கவும் யாரும் இல்லாததால் உயிர் போகும் நிலையில் உள்ளதாக பெண் நோயாளி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.