ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 10,975 குணமாகியுள்ள நிலையில் புதிதாக 255 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலையால் நேற்று ஒரே நாளில் 255 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை கொரோனாவிற்கு 14,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் 10,975 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 154 பேர் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,252 பேர் கொரோனாவிற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.