Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராமநாதபுரம் பாலியல் வழக்கு”…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை பகுதியில் வசித்து வரும் 4 வயது சிறுமியை, கடந்த 2011 ஆம் ஆண்டு காஜா முகமது என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காஜா முகமதுவை கைது செய்தனர். இதையடுத்து இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் காஜா முகமதுக்கு ரூபாய் 1.10 லட்சம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது..

Categories

Tech |