ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தக்காருமான ராஜகுமாரன் சேதுபதி திடீர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்க தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை இவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories