தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சங்கர்லால் ஐ.ஏ.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ் நீண்ட விடுப்பில் சென்றதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
இதைப்பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டராக வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமார் புதிதாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.