நம் நாட்டின் ஒரு புனிதமான இடமாக அயோத்தியை பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்த ஊர் என்பது பலரின் நம்பிக்கை. ராமர் பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்பட்ட ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கிய மாமன்னர். ராமர் பிறந்த ஊரான அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த இடத்தில் பல வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனையும் தீர்வுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஞ்சா பர்ஹட்டா கிராமத்தில் ராமருக்கு 251 மீட்டர் உயரத்தில் மிகப் பெரிய சிலை அமைக்க உத்தரப்பிரதேச அரசு நிலம் கையகப்படுத்த தொடங்கியுள்ளது. தங்களுக்கு உணவிடும் நிலத்தை அரசு கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும், இணைந்து அவர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிமக்களின் கண்ணீரிலா கடவுள்கள் சிலைகள் கேட்கிறார்கள்?