Categories
சினிமா தமிழ் சினிமா

“ராமரை சாந்தப்படுத்திய ஆதிபுருஷ் இயக்குனர்”… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!!

இயக்குநர் ஓம் ராவத் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் தயாராகி அடுத்த வருடம் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ் டி சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படம் ஐமேக்ஸ் 3டி முறையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பட குழு அயோத்தியில் வெளியிட்டுள்ளது. ஆதி புருஷ் படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போலவும் கார்ட்டூன் சேனலில் வரும் தொடர் போலவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதனை அடுத்து படத்தில் ராவணனாக நடித்திருக்கும் கதாபாத்திரம் பற்றி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சாந்தமான தோற்றம் கொண்ட ராமர் உருவத்தை கோப முகத்துடன் வெளியிட்டு இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனை அடுத்து இந்த தவறுகளை திருத்தும் முயற்சியில் தற்போது தயாரிப்பு தரப்பு இறங்கி இருக்கிறது இந்த சூழலில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ராமர் தோற்றத்தில் இருக்கும் பிரபாஸ் சாந்தமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இராமாயண காவியத்தில் நாயகனாக ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரத்தியேகமான போஸ்டரை வெளியிடுகின்றோம் என தயாரிப்பு தரப்பு குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம் தெய்வீகம் ததும்பும் விதமாக அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |