Categories
தேசிய செய்திகள்

“ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை”…. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு…!!!

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பணிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

4 நாள் பயணமாக உத்தரப் பிரதேசத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராம் லல்லா கோவிலில் நேற்று வழிபாடு செய்தார். பின்னர் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ராமர் இருக்கும் இடத்தில் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். எனது முன்னோர்கள் எனக்கு பெயர் வைத்த போது அவர்கள் கிராமர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதை நான் உணர்ந்தேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |