குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று அயோத்தி ராம் லல்லா கோவிலில் வழிபாடு நடத்தினார். இதன்மூலம் இவர் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். இதனைத்தொடர்ந்து பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ராமர் இல்லாமல் அயோத்தி கிடையாது. ராமர் இருக்கும் இடத்தில்தான் அயோத்தி இருக்கிறது. இந்த நகரத்தில் ராமர் நிரந்தரமாகவே வசிக்கிறார். என்னுடைய முன்னோர்கள் எனக்கு ராம்நாத் கோவிந்த் என்று பெயர் வைத்த போது அவர்கள் ராமர் மீது எவ்வளவு பாசம், மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று உணர்கிறேன். அயோத்தியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் யாராலும் போர் செய்ய முடியாத இடம். எனவே இந்த நகரத்தின் பெயர் அயோத்தி என்பது எப்போதும் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார்.