Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில் கட்ட தொடங்கியதும் கொரோனா அழிந்துவிடும்…. பாஜக தலைவரின் உறுதியான பேச்சு….!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிய உடன் கடவுள் ராமர் கொரோனாவை உடனடியாக அளித்து விடுவார் என பா.ஜ.க  தலைவர் நம்புகின்றார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்கு, ‘அயோத்தி ராமர் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற  பெயரில் அறக்கட்டளை ஒன்றை பிப்ரவரி மாதம் மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் சென்ற பதினெட்டாம் தேதி நடைபெற்ற அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவினை ஆகஸ்ட் 5-ல் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் அயோத்தியில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மத்தியபிரதேச சட்டமன்ற சபாநாயகர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராமேஸ்வர் சர்மா குவாலியரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். அதில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5-இல் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாடும் போது, உலகிலும் குறிப்பாக இந்தியாவிலும் பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும். மேலும் பகவான் இராமர் மனித குலத்தின் நலனுக்காகவும், அரக்கர்களை அழிப்பதற்கு மறுபிறவி எடுத்துள்ளார் எனவும் கூறினார். அதே போன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிய உடனே கொரோனா முழுவதுமாக அழிந்து விடும் என கூறியுள்ளார்.

Categories

Tech |