Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில் வரும் இந்துக்களுக்கு மர காலனி…. இஸ்லாமியரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

அயோத்தியில் கோயிலுக்கு வருபவர்களுக்கு மர காலணிகளை விற்பனை செய்து வரும் இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அயோத்தியில் வசிக்கின்ற இஸ்லாமிய குடும்பம் ஒன்று பல தலைமுறைகளாக கோயிலுக்கு வருபவர்களுக்கு மரக் காலணிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த செயலை வேற்றுமையில் ஒற்றுமை பறைசாற்றுவதாக பலரும் பாராட்டிக் இதுபற்றி கடையை நடத்தி வரும் உரிமையாளர் முகமது கூறுகையில், “நாங்கள் ஐந்து தலைமுறைகளாக இதனை உருவாக்குகின்றோம். இந்து பக்தர்களுக்காக மர காலணிகளை தயாரிக்கிறோம். இதனை என் முன்னோர்கள் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர். இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றுதான்.

நாம் ஒவ்வொருவரின் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றோம். இந்த மர காலணிகளை என் ஊழியர்கள் 7 பேருடன் இணைந்து நானும் தயாரிக்கிறேன்” என்று கூறியுள்ளார். அதேசமயத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி விட்டால், இந்த மர காலணிகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நம்பி இருக்கிறார். ராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது அவருடைய தம்பி லட்சுமணன் அவரது செருப்பை அரியணையில் அமர்த்தி ஆட்சி செய்து வந்தார் என்பதால், இந்த மர காலணிகளை இந்து மக்கள் அனைவரும் புனிதமாக போற்றுகின்றனர்.

Categories

Tech |