Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு….யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2024 -ஆம் வருடம் தொடக்கத்தில் மூன்று தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் கோவிலை ஒட்டி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி அதிலும் குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணியை மாநில அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் 1,000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு மக்கள் எளிதாக செல்லும் விதமாக சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு மெகா திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி அரசின் செய்து தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது, இந்த திட்டத்தின் மூலமாக ராமர் கோவிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும். அதில் முக்கியமாக  பக்தர்களின் வசதிக்காக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதைக்கு ஜென்ம பூமி பாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |