Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்டமான பணிகள்…. எவ்வளவு வசூல் தெரியுமா?…. அறக்கட்டளை நிர்வாகி பேட்டி….!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. மேலும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். மேலும் அடிக்கல் நாட்டினார். இப்பணி முடிவடைந்து நேத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவோ முட்டுக்கட்டைகளை சந்தித்தோம். கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்தது. அதையும் மீறி கட்டுமான பணி தடை இன்றி நடைபெற்றது. 40% கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணியில் செலவாக ரூ.11 கோடி நிர்ணயித்து இருந்தோம். பூமி பூஜை தொடர்ந்து வர ஆரம்பித்த நன்கொடை இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வந்தது. தற்போது ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வருகிறது. காசோலை, ரொக்க பணம் மட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாக நன்கொடை வருகிறது. நன்கொடை ரூ.5000 கோடி தாண்டி விட்டது. அது மட்டுமில்லாமல் தங்கம் மற்றும் வெள்ளியாகவும் நன்கொடை வருகிறது. பூமி பூஜைக்கு பிறகு பிரபலங்கள் இப்போதும் வந்து ராமஜென்ம பூமியில் தரிசனம் செய்து வருகிறார்கள். அதன்படி பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மட்டுமில்லாமல் முன்னால் ஜனாதி ராம்நாத் கோவிந்த், பல்வேறு மாநிலங்களில் கவனர்கள் முதல்- மந்திரிகள், சினிமா நட்சத்திரங்கள், நேபாளம் இலங்கை ஆகிய நாடுகளில் சேர்ந்தவர்கள் ஆகியோரும் வழிபட்டு சென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |