Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்ட…. ரூ.1 கோடி நிதி அளித்த…. பாஜக எம்பி கௌதம் காம்பீர்…!!

ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக எம்பி கௌதம் காம்பீர் 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.  நிதி திரட்டுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக எம்பி கௌதம் காம்பீர் தன்னுடைய பங்களிப்பாக ஒரு கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ராமர் கோவில் கட்டுவது அனைத்து இந்தியர்களின் நீண்டகால கனவாக இருந்தது. எனவே இதனால் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வழி ஏற்படுத்தும். ஆகவே நான் என்னுடைய குடும்பத்தின் சார்பாக சிறிய தொகை பங்களிப்பாக வழங்கி உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |