Categories
தேசிய செய்திகள்

ராமர் பக்தரான முஸ்லிம் முதியவர்… ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயம்… குவியும் பாராட்டு…!!!

கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயத்தை எழுதி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாகோந்தி என்ற கிராமத்தில் 97 வயதுடைய பாட்சா சாப் என்பவர் வசித்து வருகிறார். தேசத் தியாகிகள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பத்ராஞ்சலில் இருக்கின்ற ஒரு சிவன் கோயிலுக்கு இவர் சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்த ஒரு சாது, “ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயத்தை நீ எழுதினால் வாழ்வில் நன்றாக இருப்பாய்”.

அதனை மனதில் வைத்துக் கொண்டு அவர், தனது வீட்டில் உள்ள பாத்திரங்கள், புத்தகங்கள், ஆல மரத்தின் இலைகள், வேர்கள் மற்றும் இரும்புத் தகடுகள் என பலவற்றில் ஸ்ரீராமஜெயம் என்று எழுதியுள்ளார். அவ்வாறு எழுதி வந்த அவர் தற்போது ஒரு கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதி முடித்துள்ளார். அவர் எழுதியதை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர் வசித்து வரும் கிராமத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த அவர் ராமர் பக்தராக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |