ராமேஸ்வரத்துக்கு வருகை தந்த இந்திய தூதரக அதிகாரி பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இலங்கையில் இந்திய தூதரக அதிகாரி கோபால்பக்லே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை, புயலால் அழிந்து போன கிறிஸ்தவ ஆலயம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், தூண்டில் நரம்பு, மீன்பிடி விசைப் படகுகள் உள்ளிட்டவைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியின் கடலின் ஆழம் குறித்து மீனவர்களிடம் கலந்தாலோசித்து உள்ளார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத், மீன்துறை கூடுதல் ஆணையாளர் சஜன்சிங், கூடுதல் இயக்குனர் ஆறுமுகம், வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் மற்றும் சமூக நலத்துறை தாசில்தார் அப்துல் ஜாபர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர்.