சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார் தமன்.
இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குனர் சங்கர் ராம்சரனின் படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்குகிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த ராம்சரன் மற்றும் தில் ராஜூ சங்கரை சந்தித்து படப்பிடிப்பு குறித்து உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக ஜானி பணிபுரிகிறார்.
இந்த படத்தின் இசையமைப்பாளராக தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் .கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஷங்கரின் பாய்ஸ் படத்தில் இவர் அறிமுகமானார். தற்போது சங்கர் இயக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் ஆகிறார். படத்திற்கான முதல் பாடல் ரெக்கார்டிங் தமன் தொடங்கியுள்ளார். அப்போது சங்கர், ராம் சரண், தமன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.