Categories
தேசிய செய்திகள்

ராம்சர் ஈர நில பட்டியல்…. இந்தியாவில் 11 இடங்கள் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

ஈரானில் கடந்த 1971-ம் ஆண்டு ராம்சர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இந்த பட்டியலில் இதுவரை 49 ஈர நிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 28 இடங்கள் ராம்சரத் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 ராம்சர் தளங்கள் உருவாக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 11 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 4 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 14 ராம்சர் இடங்கள் இருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் 4 இடங்களும், மராட்டியத்தில் 1 இடமும், காஷ்மீரில் 2 இடங்களும், ஒடிசாவில் 3 இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உதய மார்த்தாண்டம் பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், வெள்ளோடை பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல் சார் உயிர்க்கோள காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் பேரூர் சதுப்பு நில வளாகம் உட்பட 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |