Categories
தேசிய செய்திகள்

ராம்நாத் கோவிந்த்க்கு பிரிவு உபசார விழா…. விருந்தளித்த பிரதமர் மோடி….!!!!!

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி வழங்கிய பிரிவு உபசார விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |