Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு… ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி…!!!

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் இன்று பிற்பகல் அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.அவரின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று பாராளுமன்ற கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |