ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராம் புதுவிதமான கதையை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது புதிய திரைப்படமொன்றை இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க அஞ்சலி, சூரி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இத்திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நேற்றிரவு படத்தின் எடிட் செய்யப்படாத காட்சிகளை பார்த்தேன். ஒரே வார்த்தை தான். படம் புத்திசாலித்தனத்திற்கு மேலாக இருக்கின்றது. நிவின்பாலி, சூரி மற்றும் சிறப்பான ஒரு ஆச்சரிய நடிகர் ஆகியோரிடமிருந்து வியக்கத்தக்க நடிப்பு. இயக்குனர் ராமின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. நடிகை அஞ்சலிக்கு சிறப்பு நன்றிகள் என கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.