ராம நவமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.சூரக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் ராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.