Categories
டெக்னாலஜி பல்சுவை

ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்…. பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட், கிளாசிக், ஹிமாலயன், இண்டர்செப்டார் 650, காண்டினண்டல் 650, மீட்டியார் 350 ஆகிய இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

ராயல் என்ஃபீல்ட் உலக அளவில் மிகப் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில் எலக்ட்ரிக் வாகன பிரிவு உத்வேகத்துடன் வளர்ச்சி பெற்று வருவதாக நிறுவன இயக்குனர் சித்தார்த்தா லால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |