Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவை கட்டிப்பிடித்த விஜய் தேவரகொண்டா”…. இது காதல் தான் எனக் கூறும் ரசிகாஸ்….!!!!!!

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் கட்டி பிடித்ததை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கூறி வருகின்றார்கள்.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதல் முறிந்து விட்டதாகவும் தற்பொழுது இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த வருகின்றார்களாம். ஆனால் இது நட்பில்லை காதல்தான் என்கின்றார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் மிருணாள் தாகூரூடன் சேர்ந்து ராஷ்மிகா நடித்த சீதா ராமம் படத்தின் விளம்பர நிகழ்ச்சி விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசினார். பின் மேடையை விட்டு இறங்கி வந்த அவர் ராஷ்மிகாவை அழைக்க கட்டிப்பிடித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் டியர் காம்ரேட் படத்தில் விஜயும் ராஷ்மிகாவும் கண்டுபிடித்தது போல இருக்கின்றது என்கின்றார்கள். மேலும் விஜய் மற்றும் ராஸ்மிகா வெறும் நண்பர்கள் இல்லை எனவும் அவர்களுக்கு இடையே காதல் இருப்பது தான் இந்த வீடியோவை பார்த்தாலே தெரிகின்றது என கூறியுள்ளனர்.

Categories

Tech |