Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா செஞ்ச காரியம்…? ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இதனை தொடர்ந்து சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் இருந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததனால் அண்மையில் மும்பையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்.பான் இந்தியா படமாக வெளியான புஷ்பாவில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஸ்மிகா நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் தெலுங்கு,தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியான சீதாராமம் எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தான நடித்திருந்தார். துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் போன்ற நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில் ராஷ்மிகா 107 கிலோ வெயிட்டை தூக்கும் வொர்க் அவுட் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். மேலும் 107 கிலோ எடையை தூக்கி சாதனை செய்த பின் அவர் ஆட்டம் போடும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கிறது. இதனை அடுத்து அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |