கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பணவீக்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கை பணவீக்கத்தின் அழுத்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. அடுத்து வரும் கூட்டங்களிலும் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாகவே அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்படும் போது உலகம் முழுவதும் மற்ற நாடுகளிலும் வட்டி உயர்த்தப்படும்.
தற்போது புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் ஏப்ரல் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை மாற்றவில்லை. இந்த நிலையில் வரும் கொள்கை கூட்டத்திலும் பட்டி உயர்த்தப்பட வாய்ப்பில்லை.
எனவே பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன்பாக கடைசியாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி தனது வட்டி மாற்றியது. தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் 4 சதவீதமாக உள்ளது. இது உயர்த்தப்பட்டால் வங்கிகளில் வட்டி விகிதம், EMI தொகை உள்ளிட்டவை உயர வாய்ப்புள்ளது. மேலும் வட்டி உயர்வு பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும் எனவும் கூறப்படுகிறது.