Categories
தேசிய செய்திகள்

SHOCKING NEWS: கடன் வட்டி, EMI என அனைத்தும் உயர போகுது?….. ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகமாக உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி திடீரென ஆலோசனை நடத்திய ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியது. இந்த நிலையில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அடுத்து வரும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் ஆவது வட்டி விகிதம் உயர்த்தப்படும். ஜூன் மாதத்தில் திடீரென வட்டி விகிதத்தை உயர்த்த கூடாது என்பதற்காக மே மாதம் திடீரென வட்டி உயர்த்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்கு முன்பு வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் லிக்விடிடி சரியாகும்.

நாட்டில் ரூபாய் மதிப்பு சரிவை எப்போதும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் ஏற்றுமதி வலுவாக உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்க த்திற்கான மதிப்பீடு வருகின்ற ஜூன் மாதம் கொள்கை கூட்டத்தில் தெரியவரும். தனியார் நுகர்வு தொடர்ந்து பாசிடிவ் ஆக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டபோது பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டியை திடீரென உயர்த்தின. அதனால் வாடிக்கையாளர்களின் EMI கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளதால் இனிவரும் நாட்களில் EMI கட்டணம் மற்றும் மற்ற கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |