நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இனிமேல் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்காக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.
ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகளில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை நேரடியாக ரிசர்வ் வங்கி கண்காணிக்கக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கின்றது. லோன்கள் எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது என்ற பல்வேறு விஷயங்களுக்கு இனி ரிசர்வ் வங்கி புதிய ஒரு நடைமுறையை உருவாகி கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. விரைவாக இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற இருக்கின்றது.
மற்றொரு முக்கியமான விஷயம், ஏற்கனவே விண்வெளித் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புகளுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்கள். இது இரண்டாம் முக்கியமான விஷயமாக இருக்கின்றது. சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நிறைய அறிவிப்புகள் வெளியாகின.அதற்கான சில முக்கியமான முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.