சீக்கிய தொழிலதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதி தீவிரவாதிகளால் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 329 பேர் உயிரிழந்தனர். இது கனடா நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு புள்ளியாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது குற்றமில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது கடந்த 14-ஆம் தேதி ரிபு தமான் சிங் மாலிக் சரே நகரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜோஸ் லோபஸ் மற்றும் டானர் பாக்ஸ் ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.