Categories
தேசிய செய்திகள்

ரிப்பன் இருக்கு…. ஆனால் கத்திரிக்கோல் எங்க… பொறுமையை இழந்த முதல்வரின் வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு சமுதாய கூடத்தை திறந்து வைக்கும்போது ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் இல்லாத காரணத்தினால் தனது கைகளால் பிடித்து இழுத்து சமுதாய கூடத்தை திறந்து வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 4ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ராஜன்ன சிர்சிலா மாவட்டத்தில் உள்ள மண்டேபள்ளி என்ற கிராமத்தில் புதிய சமுதாய கூடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்காக ஊர் மக்கள், தலைவர்கள் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கூடியிருந்தனர்.

எல்லாம் முறைப்படி நடந்துகொண்டிருந்தபோது முதல்வர் ரிப்பன் வெட்டி கொலை கேட்டுள்ளார். ஆனால் அங்கு வந்தவர்கள் யாருமே கத்தரிக்கோலை எடுத்து வரவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த அவர் பொறுமை தாங்காமல் தன் கையாலேயே ரிப்பனை அறுத்து விட்டு உள்ளே நுழைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |