விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையத்தில் சாம்சங் மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த செல்போனை வாங்கிய மூன்றாவது நாளிலிருந்து அது சரியாக வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை நேரில் அந்த மொபைல் விற்பனை நிலையத்திற்கு சென்றும் குறைபாட்டை சரி செய்து தரவில்லை. இதுகுறித்து சிவச்சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தரமற்ற செல்போனை விற்பனை செய்த விற்பனை நிலையத்திற்கு செல்போன் தொகையான 11 ஆயிரத்து 500 மற்றும் புகார்தாரர் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை 3,000 ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். ஒரு மாத காலத்திற்குள் இந்த தொகையை அந்த விற்பனை நிலையம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.