வருகிற 10-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆளுநர் உரையை தொடர்ந்து திமுக தமிழகத்தில் பதவி பிரமாணம் செய்து பத்து மாதங்களில் மொத்தமாக 1074 அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுவிட்டன.
இந்த அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் இதன் விரைவான செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த மாநாட்டின் போது மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் அது எவ்வளவு விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும் இந்த திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் விபரங்கள் குறித்தும் முகஸ்டாலின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.